search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி பஸ்"

    • கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
    • மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள நக்கம்பாடி வடக்கு தெருவில் வசிப்பவர் அன்பழகன் மகன்வந்தியதேவன் (வயது 26). இவர் ஒரு மினி பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமம் வடக்கு தெருவில் வசிக்கும் மாரிமுத்து மகன் விக்னேஷ் (24). தட்டுமால் நடுபடுகை செல்வராஜ் மகன் முனுசாமி (29) ஆகிய இருவரும் வேறு ஒரு மினி பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்குள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மினி பஸ்களை இயக்குவதில் டைமிங் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இதனால் சம்பவத்தன்று நக்கம்பாடி வந்தியதேவன் நடத்துனராக பணியாற்றும் மினி பஸ்சில் இரவு மினி பஸ்சை நிறுத்திவிட்டு உள்ளே படுத்து தூங்கி உள்ளார்.

    அப்போது அங்கே வந்த விக்னேஷ், முனுசாமி ஆகிய இருவரும் மினி பஸ் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தனர். இதில் உள்ளே படுத்து உறங்கிய வந்தியதேவன் படுகாயம் அடைந்த கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வந்தியதேவன் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பகவதி சரணம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், முனுசாமியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர்.
    • பஸ் பணியாளர்கள் தொடர்ந்து சில்லறை தட்டுபாடு குறித்து புகார் தெரிவித்து வந்தனர்.

    அவினாசி:

    நாடு முழுவதும் பணிபரிமாற்றம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அனைத்து பொதுமக்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    அதற்கேற்ப பொதுமக்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். தள்ளுவண்டி கடைகள் முதற்கொண்டு பெரிய கடைகள் என அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் இயக்கப்படும் மினி பஸ்களில் பே.டி.எம். மூலம் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து மினி பஸ் உரிமையாளர் ஜோதிஅருணாசலம் கூறுகையில்,

    எனக்கு சொந்தமாக 2 மினி பஸ்கள் உள்ளன. அவினாசியில் இருந்து தெக்களூர் வரைக்கும், அவினாசியில் இருந்து பழங்கரை வேலூருக்கும் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    பஸ் பணியாளர்கள் தொடர்ந்து சில்லறை தட்டுபாடு குறித்து புகார் தெரிவித்து வந்தனர். பஸ்சில் வரும் பயணிகள் 5 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய் தருகிறார்கள். இதனால் அவதி ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம் என்றார்.

    • கத்தியை காட்டி மிரட்டி மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தனியார் மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்ததை ஒப்புக் கொண்டார்.

    மதுரை

    மதுரை எழுமலை சூளாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 60). இவர் தனியார் மினி பஸ்சில் கண்ட க்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தார்.

    அப்போது மினி பஸ் ஆண்டார்கொட்டாரம்- சக்கிமங்கலம் ரோட்டில் சென்றது. அப்போது பஸ்சில் பயணித்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சுப்புராஜிடம் இருந்து பணப்பையை பறித்தனர்.

    அதன்பிறகு அவர்கள் கல்மேடு பகுதியில் இறங்கி தப்பிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சுப்புராஜ் கருப்பாயூரணி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பஸ் கண்டக்டர் சுப்புராஜிடம் பணப்பையை பறித்து சென்ற 2 பேர் அடையாளம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஆண்டார் கொட்டாரத்தில் பதுங்கி இருந்த ஒருவரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர்.

    இதில் அவர் ஆண்டார் கொட்டாரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் தர்மர் என்ற கோட்சா (வயது 23) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சிலைமான், அண்ணாநகர், கருப்பாயூரணி ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீஸ் விசாரணையில் அவர் தனியார் மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்ததை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய அய்யனார் நகர் முருகன் மகன் குட்டை ரமேஷ் என்பவரை போலீசார் வருகின்றனர்.

    ×